அண்ணா பல்கலை
பதிவாளர் கணேசன், தமிழ்நாடு இன்ஜி.,
மாணவர் சேர்க்கை செயலர்
இந்துமதி மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குனர் நாகராஜன் ஆகியோர் நேற்று அளித்த
பேட்டி:பிளஸ் 2 தேர்வு
முடிவுகள்,
சில தினங்களுக்கு
முன் வெளியான நிலையில், அதிகளவிலான
மாணவர்கள், பி.இ., - பி.டெக்., கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
எனவே, மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும்
வகையில், 'ஆன்லைனில்'
விண்ணப்பம் பதிவு
செய்யும் தேதி, மே, 24ல் இருந்து மே, 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 'ஆன்லைனில்' பதிவு செய்த விண்ணப்பங்களை, ஜூன், 4க்குள் நகல் எடுத்து, மாணவர் சேர்க்கை
செயலர் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment