Contact Form

Name

Email *

Message *

Wednesday, May 18, 2016

வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

சென்னை:தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை நாளை எண்ணுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.திருப்பூரில் கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பணம் கிடைத்ததை அடுத்து, அதன் மீது விசாரணை முடிவடையும் வரை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரி பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதே போல, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கோரி வழக்குரைஞர் ஒருவர் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றறம் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டது.

No comments:

Post a Comment